தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பார் காசாளர் அடித்துக் கொலை; 3 பேருக்கு காவல் துறை வலைவீச்சு! - bar cashier murdered by 3 alcoholics

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பார் காசாளரை அடித்துக் கொன்ற அடையாளம் தெரியாத மூன்று நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பார் காசாளர் அடித்துக் கொலை

By

Published : Sep 12, 2019, 3:02 PM IST

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சி.கே. அச்சுகட்டு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பார் ஒன்றில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அங்கு மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையிலிருந்த அவர்கள் அங்கு பார் காசாளராக பணியிலிருந்த வெங்கடேஷ் என்ற இளைஞரிடம் திடீரென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின் தகராறு முற்றியதில் அந்த மூன்று நபர்கள் வெங்கடேஷை, பாரில் இருந்த நாற்காலியை கொண்டு சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

அதில் படுகாயம் அடைந்த அவரை, சக ஊழியர்கள் மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details