இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி ஒரு இடது சாரி சிந்தனையாளர் என்று தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் கருத்துக்கு பதிலளித்த பிரியங்கா, அரசின் வேலை வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தவிர, நகைச்சுவை சர்க்கஸை இயக்குவது அல்ல என்றார்.
நகைச்சுவை சர்க்கஸ் இயக்குவதை நிறுத்துங்கள் - பிரியங்கா காந்தி - Don't Run Comedy Circus
டெல்லி: நகைச்சுவை சர்க்கஸ் இயக்குவதை நிறுத்திவிட்டு, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
பிரியங்கா காந்தி
மேலும், பாஜக தலைவர்கள் தங்களது வேலைகளைச் செய்வதற்கு பதிலாக, மற்றவர்களின் சாதனைகளை நம்புவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று விமர்சித்தார்.
வாகனத் துறையில் மந்தநிலை காணப்படுவதாக செப்டம்பர் மாதம் ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த அபிஜித் பானர்ஜி, 2019ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற அறிவிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.