தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்..!' - கடிதத்தில் ராகுல் உருக்கம்

டெல்லி: "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு நானே பொறுப்பேற்று பதவி விலகுகிறேன்" என்று, ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

By

Published : Jul 3, 2019, 6:01 PM IST

காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகியதை அடுத்து, அவரின் ராஜினாமா கடிதம் செயற்குழுவில் சமர்பிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், "கட்சியை மறுகட்டமைக்க சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, நான் பதவி விலகுகிறேன். கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் நான்தான் அடுத்த தலைவரை தேர்ந்தேடுக்க வேண்டும் என கூறினர். ஆனால் நான் அடுத்த தலைவரை தேர்ந்தேடுத்தால் அது சரியாக இருக்காது. அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் செயற்குழுவுக்கு முழு அதிகாரமும் ஆதரவும் தருவேன்.

நான் போராடியது அரசியல் அதிகாரம் அடைவதற்காக அல்ல. இந்திய கருத்தாக்கத்துக்கு பாஜகவின் கொள்கை எதிரானது. வெறுப்புணர்வை தூண்டும் அவர்களுக்கும், எங்களுக்குமான போர் ஆயிரம் வருடம் பழமையானது. இந்தியாவின் கருத்தாக்கத்தை சீர்குலைக்க நம் நாட்டின் மீதும், தன்னாட்சி நிறுவனங்களின் மீதும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டராகவும், இந்தியாவின் மகனாக இருந்து நாட்டை காப்பாற்றுவேன். இந்த போரில் நான் சிறிதளவும் பின்வாங்க மாட்டேன். இந்த ஆண்டு நடந்த தேர்தலில் நாங்கள் ஒரு கட்சியை எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்த இந்திய அரசின் இயந்திரங்கள், நிறுவனங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டது. இப்போது உள்ள அரசு நிறுவனங்கள் அனைத்தும் நடுநிலைமைக்கு எதிராக செயல்படுகிறது.

அரசியல் அமைப்பின் நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆக்கிரமித்துவிட்டது. நம் ஜனநாயகம் பலவீனமாகிவிட்டது. இனி தேர்தல்கள் சடங்குகள் போல் நடக்கும் அபாயம் உள்ளது. விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர்கள், தலித்துகள், சிறுபான்மையினர்கள் மகிப் பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளனர்.

விடைபெறும் ராகுல் காந்தி

எனவே, வீழ்ந்த நிறுவனங்களை மீட்டெடுக்கவும், இந்தியாவை ஒருங்கிணைக்கவும் காங்கிரஸ் ஆயுதமாக செயல்படும். இதனை அடைய காங்கிரஸ் கட்சி மாற்றத்துக்குள்ளாக வேண்டும். காங்கிரஸ்காரனாக பிறந்தேன், கடைசிவரை காங்கிரஸ்காரானாக தொடர்வேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details