ஹைதராபாத்:ஆந்திரா மாநிலத்தில் வன அலுவலர் பாஸ்கர் ராமணமூர்த்தி பணியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான நாகோலைச் சேர்ந்தவர் வன அலுவலர் பாஸ்கர் ராமணமூர்த்தி. இவர், அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ராமண மூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.