கரோனா தொற்று பரவி வரும் சூழலில் பொருளாதார செலவைக் கட்டுப்படுத்த இந்தியா பல்வேறு முயற்சிகளையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தினரின் கைகளிலும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஊரடங்கின் விளைவுகளில் இருந்து தப்பிக்க அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் ஒரு முறை 7,500 ரூபாய் வழங்கவேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் "பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க, இந்திய அரசு இப்போது மக்களுக்கு பணம் அளிக்கவில்லை என்றால், ஏழைகள் அழிந்து போவார்கள். நடுத்தர வர்க்கத்தினர் புதிய ஏழைகளாக மாறுவார்கள். சலுகைசார் முதலாளித்துவவாதிகள் நாடு முழுவதையும் ஆக்கிரமிப்பாளர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பின்னடைவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க, மக்களின் கைகளிலும், சிறு தொழில்களுக்கும் பணம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :'வாசனை - சுவையை உணர முடியவில்லை என்றாலும்கூட அதுவும் கரோனா அறிகுறி!'