தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'10ஆம் வகுப்பு தேர்ச்சியாகாத முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள் பாஸ் ஆக நாங்கள் உதவுகிறோம்' - நிதிஷ்குமார் ஆட்சி

பாட்னா: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 15 ஆண்டுகளாக 10ஆம் வகுப்பு தேர்ச்சியாகாத இரண்டு முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள் இருவரும் தேர்ச்சிபெற நிச்சயம் உதவி செய்வோம் என பிகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

ansamsam
ansam

By

Published : Oct 30, 2020, 5:08 PM IST

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாரதீய ஜனதா கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.ஐ.பி., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்துள்ளது.

சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய ரஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் , "நிதீஷ் குமார் ஒருபோதும் உடல்நலம், கல்வி, வருவாய் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லை. மக்களின் குறைகளை ஒருபோதும் கேட்கவில்லை. இந்தப் பிரச்சினைகள் காரணமாக மக்கள் பிற மாநிலங்களுக்கு குடிபெயர்கிறார்கள், ஆனால் எனது அரசாங்கம் கல்வி, சுகாதாரம், வருவாய், நீர்ப்பாசனம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி குறைகளைச் சரிசெய்யும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இதற்கு பிகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கலாய்க்கும் விதத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நிதிஷ்குமார் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் கூறுகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ள அவர், மாணவர்களின் நலனுக்காக புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டிகள் வழங்கியுள்ளார்.

ஆனால், உங்களின் இரண்டு முன்னாள் முதலமைச்சர்களும் தங்களது மகன்களை ஏன் 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற ஊக்குவிக்கவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நிச்சயமாக உங்களது முன்னாள் முதலமைச்சர்களின் மகன்களைத் தேர்ச்சிபெற உதவி செய்வோம்" எனப் பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details