டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடமிருந்து 44 ஓவியங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஓவியங்கள் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று பிரியங்கா காந்தியிடமிருந்து வாங்கியுள்ளார்.
அந்த ஓவியத்தின் விலை இரண்டு கோடி ரூபாய் ஆகும். ஊழல் ஒவியம் என்றால் காங்கிரஸ்தான் அதன் ஓவியர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.