இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில், ஜூன் 15ஆம் தேதி படைகளைப் பின்வாங்கும் நடவடிக்கையின்போது, ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய எல்லைப் பகுதியில், சீனா அமைத்திருந்த கூடாரத்தை நீக்க இந்திய ராணுவம் முயன்றபோது, இந்த மோதல் ஏற்பட்டதாக இந்தியா குற்றஞ்சாட்டியது. இருப்பினும், சீனப் பகுதியில் அத்துமீறி இந்தியா நுழைந்ததே, இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று சீன ராணுவமும் பதிலுக்கு குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், இந்த கல்வான் மோதலில் உயிரிழந்த வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், 'Speak Up For Our Jawans' என்ற பரப்புரையையும் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள காணொலிப்பதிவில், "இந்திய-சீன எல்லையில் இன்று (ஜூன் 26) நெருக்கடியான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு அதன்(வீரர்களைப் பாதுகாக்கும்) பொறுப்பை கைவிட முடியாது.