தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நண்பனைக் கொன்று வாட்ஸ்அப்பில் வாக்குமூலம்: குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு! - இடுக்கிக் கொலை வழக்கு

திருவனந்தபுரம்: இடுக்கியில் நண்பனின் மனைவியின் மீது கொண்ட காதலினால், அவரை எரித்துக் கொலை செய்து, அந்த வாக்கு மூலத்தை தன் சகோதரரிடம் வாட்ஸ்அப்பில் அனுப்பிய விடுதியின் மேலாளரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

idukki-resort-murder case

By

Published : Nov 9, 2019, 11:28 PM IST

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தனியார் சொகுசு விடுதியின் மேலாளரான வசிம் என்பவர், சந்தன்பாரா கிராமத்தைச் சேர்ந்த தன் நண்பர் ரிஜோஷ் என்பவரின் மனைவி லிஜியோடு காதல் ஏற்பட்டு திருமணம் தாண்டிய உறவில் இருவரும் இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து லிஜி வீட்டை விட்டு வெளியேறி, அவர்கள் இருவரும் ரிஜோஷுக்கு தெரியாமல் தலைமறைவாகச் சென்றனர்.

இதுகுறித்து, ரிஜோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வசிமின் சகோதரர், அவர் நண்பர்களையும் காவல் துறையினர் விசாராணைக்கு உட்படுத்தினர்.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை திடீரென்று ரிஜோஷ் காணமல் போயுள்ளார். அவரை தீவரமாக காவல் துறையினர் தேடிவந்த நிலையில் வசிம் ஒரு வாட்ஸ் அப் வீடியோவை தனது சகோதரருக்கு அனுப்பினார்.

அதில் தான்தான் ரிஜோஷைக் கொலை செய்துதாக வாக்குமூலம் அளித்தவர், மேலும் இந்த கொலைக்கும் அவர் சகோதரருக்கு, நண்பர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ காட்சியை வசிம் சகோதரர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்த தனியார் சொகுசு விடுதியின் தோட்டத்தில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் அப்பகுதியின் ஒரு இடத்தில் மண் குவிந்து கிடப்பதைப் பார்த்து சந்தேகித்து அதனைத் தோண்டிய போது, ரிஜோஷின் பாதி எரிந்த உடல் அங்கு புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின் உடல் மீட்டெடுக்கப்பட்டு கோட்டையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக காவல் துறையினர் அனுப்பிவைத்தனர், இதையடுத்து இந்தக் கொலையை செய்ததாக ஒப்புக்கொண்ட வசிம், அதற்கு உடைந்தையாக இருக்கும் லிஜியாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

சொகுசு விடுதியில் காவல் துறையினர் ரிஜோஷின் உடலை தோண்டும்போது

மேலும் படிக்க:மண பந்தத்தை தாண்டிய காதலனின் நண்பனுடன் ஏற்பட்ட உறவால் அரங்கேறிய பயங்கரம்: மூவர் கைது, 2 பேர் சரண்!

ABOUT THE AUTHOR

...view details