தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2020, 12:03 PM IST

ETV Bharat / bharat

கோவிட் - 19 தடுப்பூசி : சுதந்திர தினத்தன்று வெளியாகிறதா சோதனை முடிவுகள்?

டெல்லி : கரோனா தடுப்பு மருந்தான ’கோவாக்ஸின்’ தடுப்பூசியின் சோதனை முடிவுகளை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ICMR
ICMR

கரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சியை பாரத் பயோடெக் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான பரிசோதனை முயற்சிகள் பல முக்கிய கட்டங்களைத் தாண்டி தற்போது மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கும் ’க்ளினிக்கல் பரிசோதனை’ என்ற கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த பரிசோதனை முயற்சியை துரிதப்படுத்துமாறு ஐ.சி.எம்.ஆர். அமைப்பின் தலைவர் பல்ராம் பார்கவா பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”இந்தியாவில் உருவாகி வரும் முதல் தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசிக்கான வளர்ச்சிப் பணிகளை அரசு கூர்மையாக கவனித்து வருகிறது. கோவிட் - 19 காலமான இன்றைய கால கட்டத்தில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி பரிசோதனைப் பணிகளை பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக முடுக்கிவிட வேண்டும். மேலும், இந்த சோதனை முடிவுகளை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட முயற்சிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆறு லட்சத்தைத் தாண்டியுள்ளதும், கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐநா நிரந்தர பிரதிநிதியாக இந்தியாவின் இந்திரா மணி பாண்டே நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details