கரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்தத் தனிமை பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதிலிருந்து தப்பிக்க முடியாத என்ற சிந்தனை ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த மார்ச் 19 ஆம் தேதி மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு ஹனிமூன் சென்று வந்த கொல்லம் துணை ஆட்சியர் மிஸ்ரா, அரசுடைய உத்தரவின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருடன் பாதுகாப்புக்கிருந்த அலுவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தினந்தோறும் அவரை மருத்துவப் பரிசோதனை செய்யும் அலுவலர்கள், அவர் வீட்டில் விளக்கு எரியாததால் மூத்த அலுவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து,மிஸ்ராவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது எங்கள் சகோதரன் வீட்டிற்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், அவரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், கான்பூரில் இருப்பதாக காட்டியுள்ளது.