தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிக்கு முதல்முறையாக ஜம்மு காஷ்மீர்வாசி சான்று! - ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்

ஸ்ரீநகர்: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நவீன் சௌத்ரிக்கு ஜம்மு காஷ்மீர்வாசி என்று சான்று தற்போது வழங்கப்பட்டுள்ளது.

JK
JK

By

Published : Jun 26, 2020, 4:04 PM IST

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அளிக்கப்பட்ட பல்வேறு சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டன. இதன்மூலம் அம்மாநிலத்திற்கென கொடுக்கப்பட்ட பிரத்யேகக் குடியுரிமை நீங்கி, நாட்டின் பிறமாநிலத்தவருக்கும் ஜம்மு காஷ்மீரில் சம உரிமை பெற வழிவகுக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள காந்தி நகர் பகுதியில் வசித்துவரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சௌத்ரி என்ற ஐஏஎஸ் அதிகாரி, தான் ஜம்மு காஷ்மீர்வாசி என்ற சான்றைப் பெற்றார். வெளிமாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு முதன்முறையாக ஜம்மு காஷ்மீர்வாசி எனும் சான்று அளித்திருப்பது, இதுவே முதல்முறையாகும்.

ஜம்மு காஷ்மீரில் மாற்றியமைக்கப்பட்ட சட்ட விதிகளின்படி, 15 ஆண்டுகளுக்கும் மேல் அங்கு குடியிருப்பவர்கள், இந்த உள்ளூர் குடியுரிமைச் சான்றைப் பெறலாம்.

தற்போதுவரை, இந்த சான்றுக்காக சுமார் 33 ஆயிரத்து 157 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் நவீன் குமாரையும் சேர்த்து 25 ஆயிரம் பேருக்கு சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details