தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

450 டன் மருத்துவ உபகரணங்களை சுமந்த இந்திய விமானப்படை - ஊரடங்கு உத்தரவு

டெல்லி: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து இந்திய விமானப்படை இதுவரை 450 டன் மருத்துவ உபகரணங்களை நாடு முழுவதும் விநியோகித்துள்ளது.

IAF transports 450 tonnes of medical equipment, support materials amid coronavirus lockdown
IAF transports 450 tonnes of medical equipment, support materials amid coronavirus lockdown

By

Published : Apr 21, 2020, 10:14 AM IST

இது குறித்து இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும்வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்திய விமானப்படை விமானங்கள் துரிதமாகச் செயல்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.

மருந்துப் பொருள்கள் பெறுவதற்கு ஏதுவாக விமானப்படையின் கட்டமைப்புகளை எளிமையாக்கியுள்ளதாகவும், அனைத்துப் பகுதிகளுக்கும் மருந்துப் பொருள்களை விநியோகிப்பதற்கு ஏதுவாகவும் உள்ள விமானங்களை நாடு முழுவதும் பயன்படுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட மார்ச் 25ஆம் தேதியிலிருந்து இன்றுவரை 450 டன் மருத்துவ உபகரணங்களை நாட்டிலுள்ள 16 மாநிலங்களுக்கும், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கு கிரும்நாசினிகள், முகக் கவசங்கள், தனிமனித பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), கரோனா பரிசோதனைக் கருவிகள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்துள்ளது.

மேலும், கூடுதலாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பினைக் கண்டறியும் பொருள்களையும் கொண்டுசென்றுது எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஊழியர்களின் ஊதியத்தைக் கட் செய்ய ஏர்ஏசியா முடிவு

ABOUT THE AUTHOR

...view details