தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைப்பு - இந்திய விமானப்படை தற்போதைய செய்திகள்

அம்பாலா : பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்ட ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் இன்று (செப்.10) இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.

ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைப்பு
ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைப்பு

By

Published : Sep 10, 2020, 1:34 PM IST

பிரான்ஸ் நாட்டில் இருந்து சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

அதன்படி முதல் ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 29ஆம் தேதி ஹரியானாவில் உள்ள அம்பாலாவிற்கு வந்தடைந்தன. இந்நிலையில், இந்த ஐந்து ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானங்களை நாட்டுக்காக அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் 'Golden Arrows' என்று அழைக்கப்படும் 17ஆவது படைப்பிரிவில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான வலுவான உறவுகளை பிரதிபலிக்கிறது.

எல்லையில் தற்போது உருவாகியுள்ள, தெளிவாக கூறவேண்டும் என்றால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பதற்றமான நிலையில் இந்த இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள்

எனது சமீபத்திய வெளிநாட்டுப் பயணத்தில், எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தியா தனது இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்யாது என்பதைத் தெளிவாக அனைவருக்கும் தெரியப்படுத்தினேன்.

எல்லையில் பதற்றநிலை ஏற்பட்டபோது இந்திய விமானப்படை தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டது. இதற்கு இந்திய விமானப் படையினருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ் படவுரியா, பாதுகாப்பு செயலர் அஜய் குமார் ஆகியோர் கலந்துகொண்டர்.

ரஃபேல் விமானங்களுக்கு ஏர் சல்யூட் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி

தொடர்ந்து பேசிய பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, "மேக் இன் இந்தியா திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்திய உற்பத்தியாளர்களை ஒருங்கிணைப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை பிரான்ஸ் ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீனாவின் அத்துமீறலைத் தடுக்க முள் வேலி அமைத்த இந்திய ராணுவம்

ABOUT THE AUTHOR

...view details