6 விமானிகள் பலி
காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை பதில் தாக்குதல் நடத்தியது.
இதையும் படிக்கலாம்: விமானப்படை ஆண்டு விழா - வானில் சாகசம் புரிந்த அபிநந்தன்
இந்த நிலையில் இந்திய விமானப் படையின் எம்.ஐ – 17 சாப்பர் விமானம், ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்கம் என்ற இடத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 6 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுட்டு வீழ்த்தினர்
விபத்தா? அல்லது பயங்கரவாத தாக்குதலா? என்ற கோணத்தில் முதலில் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில், இந்திய விமான படையினர் தவறுதலாக தாக்கியதில் Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது தெரிந்தது.
இதையும் படிக்கலாம்: விமானப்படை தினம் - போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முப்படைத் தளபதிகள்!
இது குறித்து ஐஏஎப் அதிகாரி ராகேஷ் குமார் சிங் கூறும்போது, பெரும் தவறு நடந்துவிட்டது. அதை நான் ஏற்று கொள்கிறேன். விபத்து ஏற்பட்ட காலகட்டத்தில் தீவிரவாதிகள் குறித்த பதற்றம் நிலவி வந்ததால், Mi-17 V5 ரக ஹெலிகாப்டரை, ஏவுகணை என்று விமான படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.