மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டிஆர்பி அல்லது தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிக்காக இயக்கப்படும் பத்திரிகைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ''நாங்கள் சுயக் கட்டுப்பாடு மற்றும் பத்திரிகையின் சுதந்திரத்தை நம்புகிறோம். டிஆர்பி குறித்து பத்திரிகைகளும், மீடியாவும் மீண்டும் ஒருமுறை சிந்தித்துக் கொள்ள வேண்டும். மக்களிடையே பிரபலமடைய இன்னும் நல்ல வழிகள் உள்ளன. டிஆர்பி என்னும் அழுத்தத்தால், பொறுப்புமிக்க பத்திரிகைகள் பாதிக்கக் கூடாது.
தொலைக்காட்சிகளின் ரேட்டிங்களை கண்காணிக்கும் BARC ஏஜென்சி வந்தபோது, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் ஆகியவற்றில் ஒரு சுயக் கட்டுப்பாடு வரும் என்பதால் வரவேற்றோம். ஆனால் இப்போது இந்த தர ரேட்டிங்களை உருவாக்கியவர்களே புகார் தெரிவிக்கும் வகையில் சூழல் மாறியுள்ளது.