மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் கமாண்டோ படை வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 15 கமாண்டோ படை வீரர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
கட்சிரோலி தாக்குதல்: ராகுல் வருத்தம்! - மக்களவை
மும்பை: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி
மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள இத்தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ட்வீட் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.