தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன்' - சரத் பவார்! - decision

மும்பை: இந்தத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள முடிவை ஏற்றுக்கொள்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

சரத் பவார்

By

Published : May 23, 2019, 3:47 PM IST

17வது மக்களவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளதையடுத்து, அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "மக்களின் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பான பணியை மேற்கொண்டது. வாஜ்பாய் வெற்றிபெற்றபோது தேர்தலை எவரும் சந்தேகிக்கவில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details