தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நண்பனை நம்பி சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம்... பர்த்டே பார்ட்டியில் கூட்டு பாலியல் வன்புணர்வு! - நண்பனை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

ஹைதராபாத்: நண்பனின் பர்த்டே பார்ட்டிக்கு மகிழ்ச்சியுடன் வந்த கல்லூரி மாணவிக்கு கேக்கில் போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ape
aperape

By

Published : Oct 16, 2020, 3:27 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், சென்ற 5ஆம் தேதி கல்லூரியில் கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார்.

இதையறிந்த மாணவியின் நண்பர் ஜோசஃப், தனது நண்பனுக்கு பிறந்தநாள் என்றும், பர்த்டே பார்ட்டி வா என தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இதை உண்மை என நம்பிய மாணவி, யாரிடமும் சொல்லாமல் நண்பனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நவீன் ரெட்டி, ஜோசப், ராமு என மூன்று பேர் இருந்துள்ளனர்.

அவர்கள், பர்த்டே கேக்கில் போதை மருந்தை செலுத்தி மாணவியை சுயநினைவுக்கு இல்லாத கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர், மூவரும் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு வந்த மாணவி தனது நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதை யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என மூவரும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அச்சமடைந்த மாணவி பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டிலிருந்த மாணவியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவரை மருத்துவர்கள் பரிசோதித்தற்கு பிறகே, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவி நடந்த எல்லாவற்றையும் பெற்றோரிடம் தெரிவித்தையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகள் மூவரையும் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details