ஐதராபாத்தில் முக்கிய நகரான சந்த் நகரில் சுமார் 10 நாட்களுக்கு முன்பு பசுமாடு ஒன்று 10 அடி ஆழத்தில் உள்ள கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்துள்ளது. பசு கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்ததை அப்பகுதி மக்கள் கவனிக்காத நிலையில், 10 நாட்களாக உயிருக்குப் போராடி வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இன்று மாடு கத்தும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்திருந்த மாட்டை மீட்கப் போராடினர். இதையடுத்து பேரிடர் மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
10 நாட்களாக பட்டினியாகக் கிடந்த பசு! - chand nagar
ஐதராபாத்: சந்த் நகரில் உள்ள கழிவு நீர்த்தொட்டிக்குள் 10 நாட்களாக சிக்கியிருந்த பசுமாட்டை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
பசுமாடு
சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் பசுவை பத்திரமாக மீட்டனர். மேலும், பத்து நாட்களுக்கும் மேலாக கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்த பசு தண்ணீர்கூட இல்லாமல் பட்டினியாகக் கிடந்ததால் உடல்நிலை மோசமாகியிருந்தது. இதனையடுத்து அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் அந்தப் பசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பசுவை மீட்ட மீட்புக் குழுவினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.