தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2019, 10:00 AM IST

ETV Bharat / bharat

ஹைதராபாத் விமான நிலையத்தில் ஃபேஸ் ரெகக்னேஷன்!

ஹைதராபாத்: பயணிகளின் நேரங்களை குறைக்க, ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் ஃபேஸ் ரெகக்னேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

hyderabad

இந்தியாவிலேயே முதல் முறையாக விமான நிலையத்தில் ஃபேஸ் ரெகக்னேஷன் அடித்தளத்தை ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதனுடைய சோதனை முயற்சி ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் 'திகி யாத்ரா' என்னும் திட்டத்தின் கீழ் இந்த புதிய முயற்சி ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து தொடங்கியுள்ளது. இதேபோல் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரூ, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் முழுமையாக அறிமுகப்படுத்தினால் பயணிகளின் நேரம் வீணடிக்கப்படாமல் விரைவாக அனைத்து பணிகளும் முடிவுப்பெறும். பயணிகளின் ஆவணங்களை சோதனை பார்ப்பதற்கு பதிலாக முகம் சோதனை பார்க்கும் கருவி (ஃபேஸ் ரெகக்னேஷன்) வைக்கப்படுவதால் விமான நிலையத்தில் செய்யப்படும் அனைத்தும் பணிகளும் சில நேரங்களில் முடிந்துவிடும். தற்போது நடைபெறும் ஃபேஸ் ரெகக்னேஷன் சோதனையை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சரிபார்த்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details