வட கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெல்காம், தட்சிண கன்னடா, குடகு, மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இங்கு மீட்பு பணிகளில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடகு மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் வட கர்நாடகம்... - கர்நாடகா
பெங்களூரு: கர்நாடகா முழுவதும் தொடர் கனமழை பெய்து வருவதால் பெல்காம் மாவட்டத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், கோகாக் நகரம் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
வெள்ளம்
ஹிட்கல் அணைலிருந்து வெளியேறும் நீரால் பெல்காம் மாவட்டம் கோகாக் நகரம் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கோகாக் நகரில் மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் முழ்கின. வீடுகளை இழந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெலஹாவி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் எடியூரப்பா ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.