தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனிதனுக்கு உதவிக்கரம் நீட்டும் ஹ்யுமனாய்ட் ரோபோ! - சிறப்புத் தொகுப்பு - ஹ்யுமனாய்ட் ரோபோ

'வயோம்மித்ரா' என பெயரிடப்பட்ட புதிய ரோபோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஹ்யுமனாய்ட் ரோபோ
ஹ்யுமனாய்ட் ரோபோ

By

Published : Feb 24, 2020, 12:11 PM IST

பெருகிவரும் ஹ்யுமனாய்ட் ரோபோக்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்துவதற்காக பெண் உருவத்தைக் கொண்ட ஹ்யுமனாய்ட் ரோபோவை உருவாக்கியிருக்கிறது. ’வயோம்மித்ரா’ எனப் பெயரிடப்பட்ட அந்த ரோபோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் நாள் பெங்களூருவில் நடந்த மனிதனின் விண்வெளிப் பயணமும் ஆய்வும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பாதி மனித உருவத்தைக் கொண்ட ரோபோ தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்டு கூறியதாவது, “நான் வயோம்மித்ரா. நான் ஒரு ஹ்யுமனாய்ட் ரோபோ“.

ஹ்யுமனாய்ட் ரோபோக்கள் தயாரிப்பில் வயோம்மித்ரா ஒரு திருப்பு முனையாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சிக்காக செலுத்த உள்ள ’ககன்யான்’ விண்கலத்தின் ஒரு பகுதியாக இந்த ஹ்யுமனாய்ட் ரோபோவை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ’வயோம்மித்ரா’ மனிதர்களைப் போலவே விண்வெளியில் செயல்படும். இந்த ரோபோவானது விண்வெளியில் உயிர்காக்கும் செயல்பாடுகள், ஆக்ஸிஜன் செயல் புரியும் விதம் முதலியவற்றை விண்வெளி வீரர்களுக்கு தெரிவிக்கும்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 300 பவுண்டு எடை கொண்ட இது போன்றதொரு ஹ்யுமனாய்ட் ரோபோ ஒன்றை செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்பத் தயார் நிலையிலுள்ளது. முப்பரிமான ஸ்டீரியோ, வீடியோ விளைவுகளைப் படம் பிடிக்கும் பல பக்கவாட்டுகளைக் கொண்ட கேமராக்களை கொண்டதாக ஹ்யுமனாய்ட் ரோபோக்களை உருவாக்குவதில் இரு மடங்கு ஆர்வத்துடன் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகிறார்கள். ஏனெனில் உலகம் முழுக்க இத்தகைய ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதே காரணமாகும்.

ஒரு புதிய உலகத்தை நோக்கிய முதல் படி

ஹ்யுமனாய்ட் ரோபோக்கள் எனபவை மனித உருவில் உருவாக்கப்பட்டு சாதாரண மனிதர்களைப் போலவே உரையாடி தங்கள் கருத்துக்களை பங்குகொள்ளும் திறன் கொண்டவை. இவற்றில் சில வகை ரோபோக்கள் தங்களின் முந்தைய உரையாடல்களையும் நினைவுகூரக்கூடிய திறன் பெற்றவை. அது போலவே மனிதர்களைப் போல மனப்பாடம் செய்யும் திறனும் கொண்டவை. விஞ்ஞானிகள் தங்களின் கடின உழைப்பின் மூலம் மனிதர்களைப் போல உணர்வுகளை வெளிப்படுத்தும் ஹ்யுமனாய்ட் ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.

ஒரு ஹாங்காங் நாட்டு நிறுவனம் உருவாக்கிய ’சோபியா’ எனும் ஹ்யுமனாய்டு ரோபோ 50 வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அவை மேலும் முகங்களைக் கண்டறியவும், காட்சிகளை நினைவுகூரவும் கூடிய திறன் கொண்டவை. மனித சைகைகளைப் பின்பற்றி அதைப்போன்ற சைகைகளைக் காட்டும் திறனும் கொண்டவை. எந்த ஒரு மனிதனைப் போலவும் சோபியா பிற மனிதர்களிடையே உரையாடவும் முடியும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அழகிய பெண் தோற்றத்தில் சீனா உலகின் முதல் ஹ்யுமனாய்டு ரோபோவை உருவாக்கியது. ஸியா எனப் பெயரிடப்பட்ட அந்த ரோபோ வானிலை நிலவரத்தை கூறும் திறன் பெற்றிருந்தது. அதனுடைய கண் அசைவுகளும் உதட்டசைவுகளும் ஒத்திசைவு- கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. செயற்கை நுண்ணறித் துறையில் ஆராய்ச்சியானது பெறும் வேகம் பெற்றுள்ளது.

இதன் விளைவாக ரோபோ வடிவமைப்பில் பெறும் தரமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. சீனாவைப் பொறுத்தவரை ரோபோக்களின் பயன்பாடு உணவு விடுதிகள், மருத்துவனைகள், வீடுகள் வரை நீண்டிருக்கிறது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென்கொரியா, பிரித்தானியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இன்றளவும் ரோபோக்களை உருவாக்குவதில் ஈடுபட்டுவருகிறார்கள். சில நாடுகள் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்காக சிறப்பு நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கின்றன.

2104 ஆம் ஆண்டு ஜப்பானிய விஞ்ஞானிகள் செய்தித்தாள்களைப் படிக்கும் திறன்கொண்ட முதல் ஆன்ட்ராய்டு ரோபோவை உருவாக்கினர். இந்த ரோபோவானது புகழ்பெற்ற எழுத்தாளரும், தொழில்முனைவோருமான மார்டின் ரோத்பிலாட் என்பவரின் மனைவியின் சாயலில் உருவாக்கப்பட்டது. அந்த ரோபோவானது நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றதுடன் நேஷனல் ஜியோகிரபிக் சேனல் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றது.

தற்போதைய ஆராய்ச்சி முடிவுகளின்படி 2025ஆம் ஆண்டுவாக்கில் தொழிலாளர்களின் 50% வேலையை ரோபோக்களே செய்துமுடிக்கும். இதற்குக் காரணம் உற்பத்திப் பெருக்கமும், உற்பத்திச் செலவில் ஏற்பட்ட வீழ்ச்சியுமேயாகும். கணினி உற்பத்தி, மின்னியல் பொருள்கள் உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி, போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி முதலியவற்றில் ரோபோக்களின் பயன்பாடு நாளுக்குநாள் உயர்ந்துவருகிறது. இது பிற துறைகளை விட சேவைத் துறையைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016ஆம் ஆண்டு ஹ்யுமனாய்ட் ரோபோக்களின் பயன்பாடு ஆண்டுக்கு 2.96 தொகுதிகள் என இருந்தது. 2016ஆம் ஆண்டு 26.43 பில்லியன் தொகுதிகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசி நிறுவன ஆராய்ச்சி மதிப்பீடுகளின்படி ரோபோட்டிக் தொழில் துறையின் உலகளாவிய பங்கு 2018ஆம் ஆண்டு 3.801 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது 2023ஆம் ஆண்டில் 6,400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு உயரக்கூடம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மன் தொழிற்கூடங்களில் ரோபோக்களின் பயன்பாடு அதிகம். ஜெர்மனியைப் பொறுத்தவரை ஒவ்வொரு 10,000 தொழிலாளருக்கும் 309 ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய உலகச் சூழலில் ரோபோக்களின் இத்தகைய தொழில்துறை பயன்பாடானது பிற நாடுகளை விட ஜெர்மனியில் அதிகம்.

மனிதர்கள் பணியாற்றுவது கடினமாக உள்ள இடங்களில் ரோபோக்களின் சேவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ’வாக் மேன்’ என்ற ஹ்யுமனாய்ட் ரோபோ இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த ரோபோவானது 2015ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் தொழில்நுட்பங்களுடன் அது மேம்படுத்தப்படுகிறது.

அது ஆறடி உயரமும் 102 கிலோ எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டது. ஒரு கிலோவாட் பேட்டரி சக்தியுடன் அது இரண்டு மணி நேரம் செயலாற்ற முடியும். எரிவாயு கசிவு போன்ற எதிர்பாரா விபத்துகள் நேரும் சமயங்களில் இந்த ரோபோக்கள் கதவுகளைத் திறந்து வீடுகளில் நுழைந்து செயலாற்ற முடியும். மேலும் எரிவாயு கசிவு ஏற்படும் இடத்தைக் கண்டுபிடித்து அது தொடர்பான வால்வுகளை மூடவும் செய்யும்.

அதுபோலவே எரிவாயு கசிவினால் ஏற்படும் அழிவுகளையும் அகற்றும் திறன் கொண்டவை. பொறியியல் நடவடிக்கைகளிலும் ரோபோக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஏர்பஸ் குரூப்ஸ் மற்றும் ஜாய்ன்ட் ரோபோட்டிக்ஸ் லேபரட்டரி ஆகிய இரண்டும் இணைந்து ரோபோட்டிக் துறையில் நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டன. மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வானுார்தி தயாரிப்புப் பிரிவுகளில் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எங்கெங்கும் ரோபோக்கள்

ஜாய்ன்ட் ரோபோட்டிக்ஸ் லேபரட்டரி தயாரித்த ஹெச்ஆர்பி-2, ஹெச்ஆர்பி-4 வகை ரோபோக்கள் ஏணிகளில் ஏறி உயரமான நிலைகளில் செயலாற்ற முடியும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ரோபோக்களில் மனிதத் தசைநார்கள் போன்று இயங்கக்கூடிய உறுப்புகளை ரோபோக்களில் பொறுத்தி, அவற்றின் கால்களை இடையுறு இல்லாமல் இயக்க வழிவகுத்தனர். ரோபோக்களில் செயற்கை தசைநார்களை பொறுத்துவதன் மூலம், அவை தங்கள் எடையை விட 1,000 மடங்கு எடையினை மிகவும் சுலபமாக எந்தவித இடையுறும் இல்லாமல் இயங்க முடியும்.

நமது அன்றாட வாழ்வில் உதவி தேவைப்படும் முதியோர், தவழும் குழந்தைகள் ஆகியோருக்கு ரோபோக்கள் பெரிதும் உதவ முடியும். கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு ரோபோக்கள் தாம் தெளிவாகப் பேசுவதன் மூலம் உதவிசெய்ய முடியும். மருத்துவத் துறையிலும் ரோபோக்கள் உதவிக்கரம் நீட்ட முடியும்.

அதுபோலவே பாதுகாப்பு விஷயங்களிலும் ரோபோக்கள் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும். குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்டுபிடிக்கவும் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்துமுடிக்க முடியும். சந்தேகத்திற்கிடமான மனிதர்களைக் கண்டறியும் பணியினையும் செயற்கை நுண்ணறிவு செய்ய முடியும். ரோபோக்கள் விவசாயம், உணவு தயாரிதல் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஹ்யுமனாய்ட் ரோபோக்கள் செல்லப்பிராணிகளான நாய்கள், பூனைகள் போல ஒவ்வொரு குடும்பத்தின் ஒரு அங்கமாக ஆக்ககூடிய காலம் விரைவில் வரும். ரோபோக்கள் மனித வாழ்வின் முக்கியமான அங்கமே தவிர இனிமேலும் ஒரு சாத்தியமான விருப்பமாகக் கருத முடியாது. ரோபோக்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்றன.

ரோபோக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றும் திறன் பெற்றவை. அவை தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறனற்றவை. சுயமாகச் செயலாற்றக்கூடிய திறனும் அவைகளுக்கு இல்லை. தனக்குத் தேவையான சக்தியை தானே உருவாக்கும் திறனோ, மின்கலத்தைக் கட்டுப்படுத்தும் திறனோ இல்லாததால் அவைகளால் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே செயலாற்ற முடியும். இத்தகைய ஹ்யுமனாய்ட் ரோபோக்களை வளர்ச்சி திசையன்களாக பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் இவை எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயனுள்ள கருவிகளாக இருக்கும் என்பது நிச்சயம்.

ABOUT THE AUTHOR

...view details