தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாகிஸ்தானில் 40% விமானிகள் போலி உரிமம் பெற்றுள்ளனர்' - அமைச்சர் குலாம் சர்வார் கான் - எந்திரக் கோளாறு காரணமல்ல

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் விமானம் விபத்திற்குள்ளானதற்கு விமான ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் 40% விமானிகள் போலி உரிமங்களை வைத்து விமானம் ஓட்டுகின்றனர்!
பாகிஸ்தானில் 40% விமானிகள் போலி உரிமங்களை வைத்து விமானம் ஓட்டுகின்றனர்!

By

Published : Jun 24, 2020, 9:04 PM IST

மே 22ஆம் தேதியன்று பாகிஸ்தானின் லாகூர் பகுதியிலிருந்து கராச்சி நோக்கி வந்துகொண்டிருந்த ஏர்பஸ் ஏ 320 உள்நாட்டு விமானம் தரையிறங்குவதற்கு முன் கட்டுப்பாட்டையிழந்து, கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 89 பயணிகளும், விமானக் குழுவைச் சேர்ந்த 8 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தின. இதையடுத்து, பாகிஸ்தான் அரசு விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள குழுவொன்றை அமைத்தது. அந்த விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் இன்று (ஜூன் 24) முன்வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் சர்வார் கான், "பலரது உயிரைப் பறித்த இந்த விமான விபத்திற்கு அதை ஓட்டிய விமானிகளின் கவனக்கறைவே காரணம். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையம் அளித்த தரவுகளின்படி பார்த்தால், விமானத்தின் கோளாறு இதற்கு காரணமல்ல. மாறாக விமானிகளின் மனித பிழையும், அனுபவயின்மையும் மட்டுமே விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் (பிஐஏ) விமானத்தை ஓட்டிய விமானிகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் அறிவுறுத்தல்களை புறக்கணித்துள்ளனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் அறிவுறுத்தல்களை பைலட் புறக்கணித்துள்ளனர். விமானிகள், தங்களது விமான பயணம் முழுவதும் கரோனாவைப் பற்றி விவாதித்து, தங்களது கவனத்தை ஓட்டுநர் பணியில் செல்லுத்தவில்லை.

விமானத்தை தரையிறக்க கியர்கள் பயனற்று போனதையடுத்து, அது மூன்று முறை ஓடுபாதையைத் தொட்டதால் அதன் இயந்திரங்களுக்கு சேதம் ஏற்பட்டது. விமானத்தை மீண்டும் தரையிறக்கம் செய்ய முற்பட்டபோது, ​​அதன் இரண்டு என்ஜின்களும் சேதமடைந்தன. இறுதியில் கேபின் குழுவினரின் கவனமின்மையும் மற்றும் ஏடிசி இயந்திரத்தின் கோளாறும் இந்த பெரும் சோகத்திற்கு காரணமாக அமைந்தன.

விபத்திற்குள்ளான விமானத்திலிருந்து உபகரணங்கள் பிரித்தெடுக்கப்பட்டு டிகோட் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் விபத்து குறித்த முழு விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும். பாகிஸ்தானில் 40 விழுக்காடு விமானிகள் போலி உரிமங்களுடன் விமானங்களை இயக்கி வந்திருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக விமானிகளும் அரசியல் சிபாரிசுகள், அழுத்தங்கள் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். இதுவரை நான்கு விமானிகளின், விமான ஓட்டுநர் தகுதி சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற விமானிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்" என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details