கர்நாடகா மாநிலம் கிருஷ்ணா நதிப்படுகையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வெள்ளத்தால் கீழே விழும் மின்கம்பம்! பதறவைக்கும் காணொலி
பெங்களூரு: ஹலி என்ற கிராமத்திற்கு அருகே வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் ஒன்று வெள்ளத்தால் கீழே விழுந்தது.
tower collapse
இதில் குடகு, தக்ஷிணா கனடா, உடுப்பி, விஜயபூரா, பெலகவி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், ஹலி என்ற கிராமத்திற்கு அருகே வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த பெரிய மின்கம்பம் ஒன்று வெள்ளத்தில் சிக்கி கீழே விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மின்கம்பம் கீழே விழும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.