பல்கலைக்கழக மானியக் குழு, உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐந்து அறிவுரைகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இதனை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார்.
மதிப்பீட்டல் முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது, பல்கலைக்கழக வளாகங்களில் சுற்றுச்சூழல் நலன் கருதி மாற்றங்கள் மேற்கொள்வது, தொழில் தர்மம் மற்றும் உயர் பண்புகளை மாணவர்களுக்கு கற்றுத் தருவது, ஆசிரியர்கள் தேர்வில் மாற்றம் கொண்டு வருவது, ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ஆகிய பரிந்துரைகளை போக்ரியால் வெளியிட்டுள்ளார்.