தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'காதா, பானிபூரி தயாரிப்பது எப்படி...' கூகுள், யூடியூப்பில் அதிகமாக தேடும் மக்கள்! - தேசியச் செய்திகள்

டெல்லி: மக்கள் கூகுளில் பானிபூரி தயாரிக்கும் முறை குறித்தும், பிரதமர் மோடி குடிக்கச் சொன்ன "காதா"(kadha) பானம் தயாரிப்பது குறித்தும் அதிகளவில் இந்திய மக்கள் தேடியுள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

dsds
sds

By

Published : May 3, 2020, 12:15 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைகள், உணவகங்கள் மூடியுள்ள காரணத்தினால் வீடுகளில் மட்டும்தான் சமைத்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தருணத்தில் தான் நாம் வீட்டிலிருந்து பெண்கள் புதுசாக எதாவது தயாரிக்கலாம் என்பதற்காக யூ டியூப், கூகுள் தளத்தில் தேடுவார்கள். அப்படி மக்கள் கூகுள் மற்றும் யூ டியூப்பில் அதிகம் தேடியதை, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 56 விழுக்காடு மக்கள் 5 நிமிட சமையல் (5-minute recipes) மற்றும் பானிபூரி தயாரிப்பது பற்றியும், 'காதா' என்கிற ஆயுர்வேத பானம் தயாரிப்பது குறித்து 90 விழுக்காடு மக்களும் தேடியுள்ளனர். இதுமட்டுமின்றி மக்களின் அத்தியாவசியத் தேவைகளான ஆன்லைனில் மின்சார கட்டணத்தைச் செலுத்துவது எப்படி என்பதை தேடும் விகிதாச்சாரம் 180 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அதே போல், "near me" என்பதும் மார்ச் மாதத்திலிருந்து அதிகப்படியாக மக்கள் உபயோகிக்கும் வார்த்தையாக மாறியுள்ளது. "pharmacy near me" என்பதை தேடுவது 180 விழுக்காடும், "grocery delivery near me" என்பதை தேடுவது 550 விழுக்காடும், "gym at home" எனத் தேடுவது 93 விழுக்காடும் ஊரடங்கால் அதிகரித்துள்ளது.

மேலும், மருத்துவர்களிடம் காணொலி கலந்துரையாடல் மூலம் மக்கள் பேசுவதும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூகுள் இந்தியாவின் மார்க்கெட்டிங் இயக்குநர் கூறுகையில், " இந்த மாற்றங்கள் தற்காலிகமானது. ஆனால், மக்கள் புதிய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பழக்கவழக்கம் கரோனா தொற்று பாதிப்பு முடிந்தும் மக்கள் மத்தியில் மாறாமல் இருந்தால் ஆச்சர்யம் தான்" என்றார்.

இதையும் படிங்க:கரோனாவுக்காக யூடியூப்பில் ஸ்ட்ரீமிங்கான பேஷன் ஷோ!

ABOUT THE AUTHOR

...view details