தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூடங்குளம் தாக்குதல்! - இணையப் போரின் ரகசிய வரலாறு - cyber attack

கூடங்குளம் அணுமின் நிலைய இணையத் தாக்குதல் குறித்தும் இணையப் போரின் ரகசிய வரலாறு குறித்தும் ஒய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா (Lt Gen (Retd) D S Hooda) சொல்வதைப் பார்க்கலாம்.

Hood's piece on Kudankulam Nuclear Power Plant (KNPP) cyber attack

By

Published : Nov 9, 2019, 3:33 PM IST

திருநெல்வேலி மாவட்ட கடற்கரை பகுதி கூடங்குளம். இங்குதான் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி இணையத் தாக்குதல் நடந்ததாகத் தகவல் வெளியானது. பொய்யான தகவல், வதந்தி என்றும் அணுமின் நிலையம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாளே மற்றொரு அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கையில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த இணையத் தாக்குதல் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எது உண்மை? கூடங்குளத்தில் இணையத் தாக்குதல் நடந்ததா? இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஏதேனும் ஆபத்தா? இவ்வாறு பல கேள்விகள் நம்முன்னே எழுகிறது.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் 2009ஆம் ஆண்டு ஈரானிய நாட்டில் ஒரு இணையத் தாக்குதல் நடந்தது. ஈரான் அணுமின் நிலையத்தில் இந்த அணு தாக்குதல் நடந்தது. இதுவே ஒரு நாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் இணைய தாக்குதலாக கருதப்படுகிறது.

இதனை ஃபிரெட் கப்லன் (Fred Kaplan) தான் எழுதிய டார்க் டெரிடொரி (Dark Territory) என்ற நூலில், இணையப் போரின் ரகசிய வரலாறு என்று குறிப்பிடுகிறார். நடான்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளை பாதிக்க அமெரிக்கர்கள் உருவாக்கிய இணைய வைரஸ் அசாதாரணமானது. கூடவே அதிநவீனமானதும். இது ஏற்படுத்திய பாதிப்புகள் ஈரானிய யுரேனியம் செறிவூட்டல் முயற்சியை சில ஆண்டுகளில் பின்னுக்குத் தள்ளியது. இந்த சைபராட்டாக்கில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அதன் ஆரம்ப முயற்சி. கப்லான் விவரித்தபடி, 2006 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பாடுகள் தொடங்கியிருக்க வேண்டும். இதை விவரிக்க வேறு வழியில்லை.

ஒரு உண்மை என்னவென்றால், உலகம் இன்று அமைதியாக இருக்கிறது. ஆனால் உள்ளுக்குள் ஆபத்தான இணையப் போரில் ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு நாட்டை இயக்கும் முக்கியமான உள்கட்டமைப்பு கணிசமான ஆபத்தில் உள்ளது. மார்ச் 2018ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷியாவின் அரசு இணைய ஊடுருவல்கள் குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட்டன. அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி, அணு, வணிக வசதிகள், நீர், விமான போக்குவரத்து, முக்கியமான உற்பத்தித் துறைகளை குறிவைத்து 2019 ஜூன் மாதம் இந்த இணையத் தாக்குதல் நடந்தது. இதனை ரஷ்யா நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக புதினுக்கு எச்சரிக்கை விடுத்து ட்ரம்ப் பேசியிருந்தார். 2007ஆம் ஆண்டில் ஈரான் மீதான அமெரிக்க இணையத் தாக்குதல், சோனி பிக்சர்ஸ் மீதான வடகொரிய தாக்குதல், சவுதி அரம்கோ மற்றும் அமெரிக்க வங்கிகள் மீதான ஈரானிய சைபர் தாக்குதல்கள் என அனைத்திலும் அமெரிக்க தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. இணைய அச்சுறுத்தல்களின் ஆபத்திலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க பல படிகள் தேவைப்படுகின்றன.

முக்கியமாக உள்கட்டமைப்பில் வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்நாட்டுமயமாக்கலுடன் (சுதேசி உற்பத்தி) செய்யப்பட வேண்டும். வெளிநாட்டு தகவல் நுட்ப பொருட்களை கையாளுவதற்கு முன்னர் விழிப்புணர்வு தேவை. ஏனெனில் கடந்தாண்டு வெளியான ஆய்வறிக்கை ஒன்று, வெளிநாட்டு மென்பொருட்கள், செயலிகள் உள்ளிட்டவை ஒருவரை கண்காணிக்க பயன்படுத்தப்படுகின்றன என்று கூறியிருந்தது. உலகம் முழுக்க இந்த அறிக்கை பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதன் தாக்கம் பெரிதளவு இல்லை. இந்த ஆபத்தை கருத்தில் கொண்டு, பல நாடுகள் முக்கியமான நெட்வொர்க்குகளில் (இணையதளம்) வெளிநாட்டு தயாரிப்புகளின் பயன்பாட்டை தடை செய்துள்ளன.

சீனாவைப் பொறுத்தமட்டில், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், ஆப்பிள் தயாரிப்புகள், சிஸ்கோ மற்றும் பாதுகாப்பு மென்பொருட்களை வாங்குவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்தப் பட்டியலில் அந்நாட்டின் உள்நாட்டு பொருட்களும் உள்ளது. ஆக இந்தியர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., பயன்படுத்தும் மென்பொருள் மற்றும் வன்பொருளில் கூட 60 விழுக்காட்டுக்கும் அதிகமானவை ஹவாய் அல்லது இசட்இ, ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றன. 2014ஆம் ஆண்டில் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கை ஹேக்கிங் (முடக்கி) செய்ததாக ஹவாய் விசாரணையை எதிர்கொண்டது.

இந்திய தகவல் பாதுகாப்பு சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, இணையத் தாக்குதல்களால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் இந்தியா எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்னை. ஆக இந்தியா போன்ற நாடுகள், இணையப் போரிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கொள்கைகளையும் கட்டமைப்புகளையும் விரைந்து ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூடங்குளத்துக்கு எதிரான தீர்மானம்: கிராம சபையை முற்றுகையிட்ட மக்கள்

ABOUT THE AUTHOR

...view details