கட்டடங்கள், வீடுகளில் வாழாமல் நடைபாதை, பாலங்களுக்கு கீழ், ரயில்வே நடைமேடை ஆகியவற்றில் வாழ்பவர்களை வீடற்றோர் என 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் கூறுகிறது. நகரங்கள், கிராமங்கள் என இரண்டிலும் வீடற்றோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. 2001 முதல் 2011 வரையிலான பத்தாண்டு காலத்தில் வீடற்றோர்களின் தொகை 28.4 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், அதே சமயத்தில் அவர்களின் எண்ணிக்கை நகரங்களில் 20.5 விழுக்காடு அதிகரித்தது. வீடற்றோர்களின் தலைநகரங்களாக பெரும் நகரங்கள் திகழ்கின்றன.
2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ்படி, இந்தியாவில் 17 லட்சம் பேர் வீடுகளின்றி உள்ளனர். அதில், 9,38,384 பேர் நகரங்களில் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் இது 0.19 விழுக்காடாகும். நகரவாசிகளில் ஒரு விழுக்காட்டினர் வீடற்றவர்களாக உள்ளனர் என சிவில் சமூக அமைப்புகள் தெரிவிக்கிறது. இதன்மூலம், 30 லட்சம் நகரவாசிகள் வீடின்றி வாழ்கின்றனர் என கணிக்கலாம்.
வீடற்றவர்களின் எண்ணிக்கை 1,50,000 முதல் 2,00,000 வரை இருக்கலாம் என சிவில் சமூகம் கணிக்கிறது. அதில், பத்தாயிரம் பேர் பெண்கள் எனவும் கூறப்படுகிறது. உலகிலேயே வீடற்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஏதும் இல்லை. அவர்களின் தேவையை போக்க சிறப்பு திட்டங்கள் ஏதும் வகுக்கப்படவில்லை.
நகரங்களில் வாழும் வீடற்றவர்களின் விவரங்கள்
- டெல்லி - 1,50,000 - 2,00,000
- சென்னை - 40,000 - 50,000
- மும்பை - 2,00,000
- இந்தூர் - 10,000 - 12,000
- விசாகப்பட்டினம் - 18,000
- பெங்களூரு - 40,000 - 50,000
- ஹைதராபாத் - 60,000
- அகமதாபாத் - 1,00,000
- பாட்னா - 25,000
- கொல்கத்தா - 1,50,000
- லக்னோ - 19,000