குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்ததையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்குள்ள சூழல் குறித்து மத்திய உள் துறைச் செயலர் அஜய் குமார் பல்லாவுக்கு விளக்கியிருப்பதாக சி.ஆர்.பி.எஃப். பொது இயக்குநர் ஏ.பி. மகேஷ்வரி தெரிவித்தார்.
டெல்லி வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் குசைன் குடியிருப்பின் மொட்டை மாடியில் பெட்ரோல் குண்டுகள், செங்கல்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக உள் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத் துறை அலுவலர் அன்கித் சர்மாவின் குடும்பத்தினர், இந்தக் கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிருக்கு தொடர்பிருப்பதாகத் தெரிவித்த பின்னரே அவரைச் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகப் புதிதாக நியமிக்கப்பட்ட சிறப்பு காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.