தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 28, 2020, 7:45 PM IST

ETV Bharat / bharat

வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவிக்கும்போது மெளனம் சாதிக்கும் உள்துறை அமைச்சர் - கபில் சிபல்!

டெல்லி : நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் முழுமையாக முடக்கப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்த இடம்பெயர்ந்தோர் தவித்துவரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைதி காத்து வருகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Home Minister who is silent when people lose their livelihood Sibal
வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவிக்கும் போது மெளனம் சாதிக்கும் உள்துறை அமைச்சர் - கபில் சிபல்!

இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது. குறிப்பாக, தொழிற்சாலைகள், கட்டுமானத் திட்டங்களில் பணிபுரியும் தினசரி கூலிகளின் வாழ்வாதாரத்தை மிக மோசமாக பாதித்துள்ளது.

நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துகொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலி தொழிலாளர்கள், அவர்கள் வசிப்பிடங்களைவிட்டு காலி செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் முழுமையாக முடக்கப்பட்டிருக்கிறது.

வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவிக்கும் போது மெளனம் சாதிக்கும் உள்துறை அமைச்சர் - கபில் சிபல்!

இப்போது 1) வீடுகள் முடக்கப்பட்டிருக்கிறது; 2) லட்சக்கணக்கான இடம்பெயர்ந்தோர் தமது வீட்டை அடைய நடந்தே செல்கின்றனர்; 3) வீட்டில் பிழைக்க போராடும் நிலை; 4) பலர் தமது வீட்டை அடைய முடியாது தவிக்கின்றனர். உள்துறை அமைச்சர் இது குறித்தெல்லாம் பேசுவதில்லை, கண்டுகொள்வதில்லை ” என ட்வீட் செய்துள்ளார்.

முழுமையான முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்த இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்த இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல நகரங்களை விட்டு வெளியேறி வருவது கவனிக்கத்தக்கதாகும்.

இதையும் படிங்க :கரோனாவுக்கு தெலங்கானாவில் முதல் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details