மகாராஷ்டிராவில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் அனைத்தும் கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டன. தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட மதுப்பிரியர்கள், கடைகளுக்கு முன்பு குவிந்தனர். இதைக் கருத்தில் கொண்டு மாநில அரசு, மதுபானங்களை டோர் டெலிவரி செய்யலாம் என முடிவு செய்தனர்.
இதை நடைமுறைப்படுத்துவதற்கு கடை உரிமையாளர்கள் சிறிது நாள்கள், கால அவகாசம் கோரியதால், மே 15ஆம் தேதி முதல் மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்யப்படும் என அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அறிக்கையில், "மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் மதுபானம் டோர் டெலிவரி விநியோகம் தொடங்கப்படும். ஏற்கெனவே தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு கடை உரிமையாளரால் 10 டெலிவரி பாய்ஸ் மட்டுமே நியமிக்க முடியும். ஒரு டெலிவரி நபர் 24 மதுபானப் பாட்டில்களுக்கு மேல் ஒரே நேரத்தில் கொண்டு செல்லக் கூடாது.
கடை உரிமையாளர்கள் பாட்டிலில் அச்சிடப்பட்ட எம்ஆர்பி விலைக்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அரசு வெளியிட்ட உத்தரவின்படி, ஆன்லைனில் மதுபானம் விற்பது வாங்குபவருக்கும் விற்பனையாளருக்கும் இடையிலான எழுதப்படாத ஒப்பந்தமாகும். இதனால், அவர்களுக்கிடையில் நடைபெறும் எந்தவொரு மோதலுக்கும் அரசு பொறுப்பு ஏற்காது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: இரண்டாம் இடத்தில் குஜராத்...