தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வண்ணங்களை பூசி வண்ணமயமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டம்! - ஹோலி பண்டிகை

டெல்லி: வட இந்தியாவில் ஹோலி பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

HOLI

By

Published : Mar 20, 2019, 11:32 AM IST

பனிக்காலம் முடிந்து, வரும் வெயில் காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை வட இந்தியாவில் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக குஜராத்தில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அரங்க பஞ்சமி என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை இளவேனிற்காலத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியா மட்டுமில்லாது, நேபாளம், வங்கதேசம், மொரீசியஸ், திரினிதாத் போன்ற இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களிலும் கொண்டாடப்பட்டுவருகிறது.

இதில் வயது வித்தியாசமின்றியும், ஆண் பெண் பேதமின்றியும் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களைப் பூசி மகிழ்ச்சிகளையும், அன்பையும் பரிமாறி ஹோலி பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details