குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து அச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கூறி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, புலனாய்வுத் துறை இயக்குநர் அரவிந்த்குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.