ஸ்ரீநகர்: ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்ட போது, அம்மாநிலம் முழுவதும் இணையச் சேவை முற்றிலும் தூண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2ஜி இணைய சேவை அம்மாநில மக்களுக்கு வழங்கப்பட்டது.
கரோனா காலத்தில் நாடு முழுவதும் இணையத்தின் மூலம் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்ற போது, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் இணைய வசதி இல்லாமல் சிரமத்தை எதிர்கொண்டனர்.