டெல்லி: 27 வகையான பூச்சுக்கொல்லிகளைத் தடைசெய்யும் வரைவை மே 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்து வேளாண் வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் விவசாயிகள் உபயோகித்து வரும் 66 பூச்சிக்கொல்லிகளில், 27 பூச்சிக்கொல்லிகளை தடை செய்வதற்கான வரைவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் பேசிய பாரதிய கிருஷக் சமாஜ் தலைவர் கிருஷ்ணா வீர் சவுத்ரி, ”இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 80 விழுக்காடு பூச்சிக்கொல்லிகள், அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒருபுறம், பிரதமர் மோடி அதிக ஏற்றுமதியை ஊக்குவிக்கிறார். ஆனால், கொள்கையை வடிவமைப்பவர்கள் அது குறித்து யோசிப்பதாகத் தெரியவில்லை.
'இ.எம்.ஐ. காலக்கெடு நீட்டிப்பை மக்கள் கவனத்துடன் அணுக வேண்டும்'
வழக்கமாக, இந்தியாவில் விவசாயிகள் திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களைப் பயிரிடுவதில் மான்கோசெப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துகிறார்கள். பிற நாடுகளும் பயிர்களைப் பாதுகாக்க இதைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், இதுபோன்ற பொருள்களுக்குத் தடை விதிப்பது, நம்மை நாமே காயப்படுத்துவதற்குச் சமம்," என்று கூறினார்.