வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடந்த சில தினங்களாகவே புதுச்சேரியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
புதுவையில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்
புதுச்சேரி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து இடி மின்னலுடன் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Heavy rain with thunder and lightning in Puduvai
அதேசமயம் கடந்த இரண்டு தினங்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் நகரப்பகுதி மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளிலும் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.