மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோலாப்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக பல தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கையாக 85,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 10,000 பேர் வெளியேற்றம்!
மும்பை: கனமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இருந்து சுமார் 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும், தெற்கு கோலாப்பூர் மற்றும் பெல்காம் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை நேற்று அதிகாலை முதல் முழுவதுமாக மூடப்பட்டது. 2005ஆம் ஆண்டு பெய்த மழையைவிட தற்போதைய மழை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், மீட்புப் பணிகளுக்காக ராணுவத்திடமும் கப்பல் படையிடமும் உதவி கேட்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கனமழையால் கிருஷ்ணா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் சதாரா, சாங்லி ஆகிய மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.