தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு முட்டி மோதும் மூன்று எம்எல்ஏக்கள்! - சபாநாயகர்

புதுச்சேரி: சபாநாயகர் பதவியை பெறுவதற்கு மூன்று எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால் சபாநாயகர் தேர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

puducherry

By

Published : May 29, 2019, 11:51 PM IST

புதுச்சேரி மாநில சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால், அந்த பதவி காலியாகியிருப்பதையடுத்து, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், பாலன் ஆகியோர் கட்சித் தலைமையிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகின.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், புதிய சபாநாயகர் தேர்வு குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அக்கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details