இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "ராஜஸ்தானில் உள்ள 26 மாவட்டங்களுக்கு அடுத்து ஐந்து நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசக்கூடும். இதனால், அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் 45 டிகிரிக்கும் மேலாகப் பதிவாகியுள்ளது.
'நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசும்' - வானிலை ஆய்வு மையம்! - indian metrological department
டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
heat
மஹாராஷ்டிராவின் விதர்பா, மாராத்வாடா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கடுமையான அனல் காற்று வீசக்கூடும். தலைநகர் டெல்லியில் மாலை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இங்கு, அதிகபட்சாக 42 டிகிரி பதிவாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசும்", என்று கூறப்பட்டுள்ளது.