தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... வாகனமும் கிடைக்கல' - களத்தில் இறங்கிய சிறுவன்! - வைரஸ் வீடியோ

லக்னோ: உத்தரப் பிரதேசத்திலிருந்து பிகார் வரை ரிக்‌ஷாவில் உடம்பு சரியில்லாத தந்தையை அழைத்துச் சென்ற சிறுவனின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சிறுவன்
சிறுவன்

By

Published : May 16, 2020, 11:22 AM IST

Updated : May 16, 2020, 12:03 PM IST

மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்ததைத் தொடர்ந்து, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில் மூலமும், லாரியிலும் பயணித்து வருகின்றனர். அவ்வாறு போக்குவரத்து வசதி கிடைக்காத குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் நடைபயணமாகச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில், பிகாரைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உத்தரப் பிரதேசத்தில், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதான மகன் உள்ளார். இவர்கள் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வந்த நிலையில், தொழிலாளருக்குத் திடீரென்று உடல்நிலை மோசமாகியுள்ளது. தந்தையின் உடல்நிலையைக் கவனித்து வந்த மகனுக்கு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார்.

இச்சமயத்தில்தான் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து, தந்தையைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல, சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கோரினார். ஆனால், கரோனா அச்சத்தால் யாரும் உதவ முன்வரவில்லை.

உடம்பு சரியில்லாத தந்தையை அழைத்துச் சென்ற சிறுவன்

பின்னர், தந்தையைக் காப்பாற்ற தான் மட்டுமே இருக்கிறோம் என்ற நினைப்புடன் ரிக்‌ஷாவில் பயணத்தைத் தொடங்க முடிவுசெய்தான் அச்சிறுவன். உடம்பு சரியில்லாத தந்தையை ரிக்‌ஷாவில் சிறுவன் அழைத்துச் செல்வதைப் பார்த்த ஒருவர் அவரிடம் விசாரித்தார்.

அதற்கு அச்சிறுவன், "ஊரடங்கால் வேலையில்லாத காரணத்தினால், பிகாரில் உள்ள எங்களது சொந்த கிராமத்திற்குச் செல்ல முடிவு செய்தோம். ஆனால், எங்களுக்கு வாகனம் கிடைக்கவில்லை. என் தந்தை கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாததால், ரிக்‌ஷாவில் அழைத்துச் செல்கிறேன்" எனத் தெரிவித்தான்.

இக்காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், சிறுவனிடம் விசாரித்தவர் அவர்களுக்குத் தேவையான பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதேபோல், குடிபெயர்ந்த தொழிலாளரின் மகன் நடைபயணத்தில் களைப்பாகி, டிராலி பேக் மீது படுத்துறங்கிய புகைப்படமும் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட விண்வெளி வீரர்கள்!

Last Updated : May 16, 2020, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details