தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு துறைகள் தனியார்மயம்: சுகாதாரத் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - அரசுத் துறை தனியார்மயம்

புதுச்சேரி: அரசு துறைகளை தனியார்மயம் ஆக்கும் முடிவை கைவிடக் கோரி சுகாதாரத் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

gh
gh

By

Published : May 24, 2020, 10:04 AM IST

புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அரசு பொது மருத்துவமனை முன்பு மத்திய அரசின் டியர்னஸ் அலவன்ஸ் நிறுத்திவைப்பு ஆணையை திரும்பப் பெறுதல், அரசுத் துறைகளை தனியார்மயம் செய்யும் முடிவை கைவிடுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளி பின்பற்றினர்.

இதையும் படிங்க: காரைக்காலில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!

ABOUT THE AUTHOR

...view details