மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை சார்பில், புதுச்சேரி அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! - மருத்துவக் காப்பீடு திட்டம்
புதுச்சேரி: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
இதில், பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய நாராயணசாமி, இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் ரூ. 1.2 கோடி மத்திய அரசின் நிதியில் இருந்தும், ரூ. 80 லட்சம் மாநில அரசின் நிதியிலும் முழுமையாக சேர்க்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதனால், புதுச்சேரியில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் பயனடைவார்கள்.
ஐந்து லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற வாய்ப்புள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.