தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

70 பேர் மட்டுமே பங்கேற்றனர்! சர்ச்சை திருமணம் குறித்து குமாரசாமி - HD Kumarswamy Tweeted about Clarification of Nikhil marriage

என் மகன் திருமணத்தில் எந்த விதிமீறலும் இல்லை என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ட்வீட் செய்துள்ளார். சமூக இடைவெளியை பின்பற்றாமல் மகன் திருமணத்தை நடத்தியதாக கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் இப்பதிவை அவர் இட்டுள்ளார்.

குமாரசாமி மகன் திருமணம்
குமாரசாமி மகன் திருமணம்

By

Published : Apr 19, 2020, 10:50 AM IST

பெங்களூரு: என் மகன் திருமணத்தில் எந்த விதிமீறலும் இல்லை என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ட்வீட் செய்துள்ளார்.

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, தனது மகன் நிகிலுக்கும், காங்., முன்னாள் அமைச்சரின் பேத்தியான ரேவதி என்பவருக்கும், பெங்களூருவை அடுத்த ராமநகர மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதற்காக 42 வாகனங்களும், 120 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கர்நாடக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், ஊரடங்கு நேரத்தில் நடந்த இத்திருமணத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை எனவும், திருமணத்தில் பங்கேற்றவர்கள் யாரும் முகக் கவசம் அணியவில்லை எனவும் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இது குறித்து குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், இரு குடும்பத்தார்களை சேர்ந்த 60 முதல் 70 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள், விழாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது, எனக்கூறினார்.

ஆனாலும், சர்ச்சையான இத்திருமணம் குறித்து குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் குரல் எழுப்பினர். இச்சூழலில் குமாரசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் எடியூரப்பா கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details