காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி கடந்த 15 மாதங்களாக கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வந்தது. அக்கூட்டணியில் உள்ள அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம், பாஜக கூட்டணியில் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி மாறுகிறாரா குமாரசாமி? - BJP
பெங்களூரு: காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பாஜக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமாரசாமி
இதுகுறித்து மதசார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் ஜி.டி. தேவ கவுடா கூறுகையில், "எங்கள் கட்சியின் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர். மற்றவர்கள், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு கட்சியை வளர்க்க பரிந்துரைத்துள்ளனர்" என்றார்.