தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநில மொழிகளில் சுற்றுக்சூழல் தாக்க மதிப்பீடு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு - சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

டெல்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (இஐஏ) அறிவிப்பு வரைவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளில் வெளியிடுமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட்டதற்கு எதிராக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை டிசம்பர்  4ஆம் தேதிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மாநில மொழிகளில் சுற்றுக்சூழல் தாக்க மதிப்பீடு: வழக்கை ஒத்திவைத்த டெல்லி உயர் நீதிமன்றம்
மாநில மொழிகளில் சுற்றுக்சூழல் தாக்க மதிப்பீடு: வழக்கை ஒத்திவைத்த டெல்லி உயர் நீதிமன்றம்

By

Published : Oct 24, 2020, 12:16 PM IST

சூற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்பு 2020 வரைவு குறித்த பொதுக் கருத்துக்களுக்கான நேரத்தை, அட்டவணை VIII இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து இணையதளத்தில் பதிவேற்றிய நாளிலிருந்து 60 நாட்களுக்கு நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா, 2020 வரைவு இஐஏ அறிவிப்பை, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

"2020 ஐஐஏ அறிவிப்பு வரைவை பல்வேறு மொழிகளிலும், குறைந்தபட்சம் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளிலும் மொழிபெயர்க்கக்கூறும் இந்த நீதிமன்றத்தின் வழிகாட்டுதல், பல்வேறு குழப்பங்களை உருவாக்கும். அனைத்து சட்டரீதியான விதிமுறைகளையும் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான எதிர்கால கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வடமொழிகளில் மொழிபெயர்க்க இந்திய ஒன்றியத்தின் அனைத்து அறிவிப்புகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்கும் இது ஒரு சவாலாக இருக்கும்" என்று கோரினார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (இ.ஐ.ஏ) 2020க்கான பரிந்துரைகளை ஆகஸ்ட் 11 வரை உயர் நீதிமன்றம் முன்னதாகவே நீட்டித்திருந்தது. மேலும், மே 8 தேதியிட்ட அறிவிப்பில் தெளிவற்ற தன்மை இருப்பதைக் கண்டறிந்த நீதின்மன்றம், வரைவு அறிவிப்புக்கான பொது மக்களின் பரிந்துரைக்காக கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது.

முன்மொழியப்பட்ட அறிவிப்பை பிற மொழிகளிலும் திறம்பட பரப்ப வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியதோடு, மொழிபெயர்ப்புகளை MoEFC இன் வலைதளம் மற்றும் அனைத்து மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் வலைதளங்கள் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வலைதளங்கள் மூலமாகவும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details