கரோனா தொற்று காரணமாக, இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அதன் பிரதிபலிப்பாக மக்கள் பலர் தங்கள் வேலைகளை இழந்து வருகிறார்கள். சில நிறுவனங்களில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி, திடீரென்று பணியில் இருந்து நீக்கப்படும் சூழலால், அங்கு பணிபுரிந்த ஆட்களுடன் அவர்களைச் சார்ந்து இருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் நெருக்கடி கரோனாவைக் காட்டிலும் பெரும் துயரமானது.
இதுபோன்ற எதிர்பார்க்க முடியாத, பல திடீர் காலகட்டத்தில் வேலையின்மை இன்ஸ்யூரன்ஸ் ஒன்று நாம் எடுத்திருந்தால் நம் வீட்டின் நெருக்கடி பொருளாதாரத்தை குறிப்பிட்ட காலம்வரை சமாளிக்க ஆறுதலாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
வேலை இழப்பு இன்ஸ்யூரன்ஸ் என்றால் என்ன?
வேலை இழந்த தனி நபர் ஒருவர் வேலையின்மை இன்ஸ்யூரன்ஸ் ஒன்று போட்டிருந்தால், அந்த பாலிசிதாரரின் பெயருக்கோ அல்லது அவரது குடும்பத்தினர் பெயரிலோ ஒரு குறிப்பிட்டத் தொகை வந்து சேருவதால், அது அவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்.
யாரெல்லாம்வேலை இழப்பு இன்ஸ்யூரன்ஸ்பெற முடியும்?
உண்மையில் வங்கியில் தனி நபர் ஒருவரால், வேலையின்மை இன்ஸ்யூரன்ஸைத் தனியாக பெற்றுவிட முடியாது. அது விபத்து, உடல் நலக்குறைவு உள்ளிட்ட பெரும் காப்பீடு மூலம் பாலிஸி ஒன்று எடுப்பதின் வாயிலாக, அவர்கள் திடீரென்று வேலையை இழக்கும் சூழலில், இந்தப் பாலிஸி பிரிவுகளின் கீழ், தங்களின் வேலை இழப்பு இன்ஸ்யூரன்ஸைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தக் காப்பீட்டுத் திட்டம் எதையெல்லாம் பெற்றுக் கொடுக்கும்?