உலகெங்கிலும் உள்ள சுகாதார ஊழியர்கள், புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் வீரப்போர் நடத்திவருகின்றனர். இந்நிலையில், புதிய கரோனா பெருந்தொற்றை எதிர்ப்பதில் கேரள செவிலியர்கள் பெரும்பங்காற்றுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகளவில் பணிபுரியும் செவிலியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். அதிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முதலிடம் வகிக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பட்டம் பெற்ற செவிலியர்களில், 30 விழுக்காட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். 15 விழுக்காட்டினர் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் 12 விழுக்காட்டினர் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் பணியாற்றுகின்றனர்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான அன்னா சூப்ரி, கேரள செவிலியர்கள் தங்கள் நாட்டின் செய்துவரும் சுகாதார சேவைகள் குறித்து பாராட்டினார்.
கேரள செவிலியர்களுக்கு தலை வணங்குகிறேன்! - கேரள செவிலியர்களுக்கு பாராட்டு
ஹைதராபாத்: கேரளாவிலிருந்து வரும் செவிலியர்கள் மிகுந்த ஆர்வம், மனிதநேயம், சேவை நோக்கத்துடன் வருகிறார்கள். அவர்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது.
அவர் பேசிய காணொலி (வீடியோ) ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் கூறுகையில், “வெளிநாட்டு செவிலியர்கள் எங்கள் நாட்டில் பணிபுரிவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்திய செவிலியர்கள், அதிலும் குறிப்பாக கேரளாவிலிருந்து வரும் செவிலியர்கள் மிகுந்த ஆர்வம், மனிதநேயம் மற்றும் சேவை நோக்கத்துடன் வருகிறார்கள்.
அவர்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. புதிய கரோனா வைரஸ் பெருந்தொற்று உலகெங்கிலும் அழிவை ஏற்படுத்திவரும் நிலையில், கேரள செவியர்கள்தான் தங்கள் உயிரை பணயம் வைத்து தொற்றுநோய்க்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
அவர்களின் பணி பாராட்டுக்குரியது. அவர்கள் எங்கள் பாராட்டுக்கு தகுதியானவர்கள். கேரள செவிலியர்களுக்கு எங்களின் வணக்கங்கள். தலை வணங்குகிறேன்” என்றார்.