தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹத்ராஸ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் மீது வழக்குப்பதிவு - பீம் அர்மி கட்சித் தலைவரான சந்திரசேகர் ஆசாத்

விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தைச் சந்தித்த பீம் ஆர்மி கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Chandrashekhar Azad
Chandrashekhar Azad

By

Published : Oct 5, 2020, 11:33 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் கடும் அழுத்தம் தரப்பட்டுவருகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கியப் பட்டியலினத் தலைவரான பீம் ஆர்மி கட்சித் தலைவரான சந்திரசேகர் ஆசாத் பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்தினரை நேற்று (அக். 04) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்த சந்திரசேகர் ஆசாத் மீது உத்தரப் பிரதேச மாநில காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 144 தடை உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டி ஆசாத், அவரது கட்சியினர் சுமார் 400 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதையும் படிங்க:சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை தொடங்கிவைக்கும் பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details