தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் முதல் கழுதைப் பால் பண்ணை ஹரியானாவில் தொடக்கம்! - நாட்டின் முதல் கழுதைப் பால் பண்ணை

ஹிசார்: நாட்டின் முதல் கழுதைப் பால் பண்ணை ஹரியானாவின் ஹிசார் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.

donky
onky

By

Published : Sep 24, 2020, 3:19 PM IST

நாட்டில் இதுவரை மாடு, எருமை, ஆடு, ஒட்டகம் போன்ற விலங்குகளின் பால் விநியோகமே நடைபெற்றுவந்தது. அந்த வரிசையில் அடுத்ததாக ஹலாரி வகையைச் சேர்ந்த பெண் கழுதையும் இணையவுள்ளது.

என்.ஆர்.சி.இ. எனப்படும் குதிரை கழுதை உள்ளிட்ட விலங்குகள் குறித்து ஆய்வுசெய்யும் தேசிய ஆராய்ச்சி மையம் ஹரியானாவின் ஹிசார் பகுதியில் கழுதைப் பால் பண்ணையைத் தொடங்கியுள்ளது.

இந்த ஹிலாரி வகை கழுதை இனத்தைப் பெருக்குவதற்கான இனப்பெருக்கமும் குஜராத்தில் 10 கழுதைகளை வைத்து நடைபெற்றுவருகிறது.

இந்தக் கழுதைப் பால் புற்றுநோய், உடல் பருமன், ஒவ்வாமைகளுக்கு எதிராகப் போராட உதவுகிறது.

ஹிலாரி கழுதையின் இனப்பெருக்கம் முடிந்தவுடன் பால் விநியோகம் விரைவில் தொடங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாலின் விற்பனை விலை ஒரு லிட்டருக்கு 2 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது.

இது குறித்து இத்திட்டத்தில் பணிபுரியும் என்.ஆர்.சி.இ.யின் மூத்த விஞ்ஞானி டாக்டர் அனுராதா பரத்வாஜ் கூறுகையில், "ஹிலாரி கழுதைப் பால் ஒருபோதும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாது, ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் ஏற்படும் கடுமையான நோய்களுடன் போராட உதவுகிறது" என்றார்.

முன்னதாக மருத்துவர் பரத்வாஜ், கழுதைப் பால் மூலமாக தயாரிக்கப்படும் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிலையத்தில் பணியாற்றினார். அங்கு கழுதைப் பால் சோப்பு, லிப் பாம், பாடி லோஷன்கள் விற்பனை செய்யப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details